Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – இருவர் பலத்த காயம்

0

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடாகம பகுதியில் வாகனங்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து 04.11.2017 அன்று மதியம் 1 மணியளவில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டனிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்றும், நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                                                                                 

சிறிய ரக லொறியில் சென்ற இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் அவ்விடத்தில் கூடிய மக்களின் ஊடாக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் இப்பகுதியில் சீரற்ற காலநிலையினால் பிரதான வீதியில் வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த இரு வாகனங்களும் அதிக வேகத்துடன் பயணித்ததனால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com