அனைவர் முன்னிலையிலும் தனது மனைவியின் ஆடையை கிண்டல் செய்த இளவரசர் வில்லியம்

0

பிரித்தானியா ராயல் விமானப்படையினர் அமைத்துள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்களை போன்றவற்றை பார்வையிட்டு அவர்களுடன் இணைந்து அரச குடும்ப தம்பதியினரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது இளவரசி கேட் மிடில்டன் பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருந்தார்.

அப்போது, விமானப்படை வீரர்கள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது, இளவரசர் வில்லியம் அனைவர் முன்னிலையிலும் வைத்து எனது மனைவி அணிந்துள்ள ஆடை கிறிஸ்துமஸ் மரம் போல் உள்ளது என கிண்டல் செய்துள்ளார்.

இதனை கேட்டு இளவரசி கேட் உட்பட வீரர்கள் அனைவரும் சிரித்தனர். பின்னர் கேட், நான் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கவா அல்லது நகர்ந்து செல்லவா என கேட்டதையடுத்து சிறிது நேரம் அங்கு சிரிப்பொலி நிலவியது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com