அவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ்

0

முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபருக்கு அளிக்கப்படும். முதலுதவி முறைகளை மற்றும் உதவும் டிப்ஸ் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனமாக இருப்பது அவசியம். ஏனென்றால் நோய்த்தொற்று ஏற்பட்டு பரவும் வாய்ப்பு உண்டு. எனவே, முதல் உதவி செய்வதற்கு முன்னரும், முதலுதவி தந்த பின்னரும் கைகளை சோப்பினால் கழுவுவது மிகவும் அவசியம்.

எவ்வகை காய்ச்சலாக இருந்தாலும் அதை உடனடியாகக் கவனித்து என்ன காரணம் என்பதை அறிந்து, முதல் உதவி செய்வதுடன் உரிய சிகிச்சையினையும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக குழந்தைகளின் உடல் நலனில் அதிக அக்கறை காட்டுவது சாலச்சிறந்தது.

தன்னிலை மறந்து தவிப்போருக்கு அத்தருணத்தில் உடலில் இருந்து ஆற்றலும், நீர்சத்தும் அளவுக்கு அதிகமாக வெளியேறும். இயல்பு நிலைக்கு கொண்டுவர, வெந்நீர் மற்றும் க்ளுக்கோஸ் போன்ற திரவ உணவுகளைக் கொடுப்பது நன்று.

அதிர்ச்சி அல்லது விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், மயக்கம் அடைய வாய்ப்பு உள்ளதால், முதலில் அவரின் தலையினை தாழ்வான நிலையில் இருக்குமாறு, ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். இப்படி செய்வதால் ஒரு மனிதரின் சுயநினைவை தக்கவைக்க வாய்ப்புள்ளது.

சுவாசம் நின்று போனால், உடனடி முதலுதவியாக, மூச்சு நின்று போனவரின் வாய்க்குள் அடுத்தவர் வாயை நெருக்கமாக வைத்து மூச்சை செலுத்த வேண்டும். சுய நினைவின்றி கிடப்பவரின் தொண்டை பகுதியில் அவரது நாக்கு, கட்டியான கோழை மாட்டிக்கொள்ளுதல், தண்ணீரில் முழ்குதல், அளவுக்கு அதிகமான புகையால் மூச்சுவிடத் திணறுதல் போன்றவை ஒருவருக்கு சுவாசம் நின்று போவதற்கான முக்கிய காரணங்களாகும்.

சிறுவர், சிறுமியருக்கு மூச்சு தடைபட்டு, சுவாசம் நின்று போகும்போது மார்பின் நடுவில் 2 விரல்களை மட்டும் வைத்து அழுத்துவது போதுமானது. இதில் மிக கவனமும் தேவை ஏனென்றால், மார்பின் மீது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்யும்பட்சத்தில், மார்பு எலும்பு முறிய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, கல்லீரல் மற்றும் சதைப்பகுதிகள் சேதமடையலாம்.

நீரில் முழ்கியவருக்கு சுவாசம் தடைபட தொடங்கினால், 3 நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். எனவே, தண்ணீரில் சிக்கியவரைக் கரைக்கு கொண்டு வரும் வரைக்கும் காத்திருக்கக் கூடாது. கால அவகாசம் அறிந்து உடனே செயல் பட வேண்டும்.

வெயிலில் கடுமையாக உழைப்பவர்களுக்கு கை, கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வலியை ஏற்படுத்துகின்ற பிடிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய நன்றாக கொதிக்க வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் உப்பு சேர்த்து அளித்தால் பயன் கிடைக்கும்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com