ஆண்ட்ரூ ரசுலால் ஓவராக ஆட்டம் போடும் தினேஷ் கார்த்திக்? சென்னை அணிக்கே சவால்?

0

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் கொல்கத்தா அணி இன்னும் மூன்று நாட்களில் சென்னை அணியை சந்திக்கலாம் என்று கூறியுள்ளதால் சென்னை ரசிகர்கள் ஆவேசமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியில் தோல்வியின் விழும்பில் இருந்த கொல்கத்தாவை ஆண்ட்ரூ ரசுல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற வைத்தார்.

13 பந்துகளை சந்தித்த அவர் 48 ஓட்டங்கள் குவித்தார்.

இந்நிலையில் சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசுசிலின் அதிரடியை பாராட்ட, உடனடியாக கொல்கத்தா அணி இன்னும் மூன்று நாட்களில் பார்க்கலாம் என்று சவால் விடுவது போல் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொல்கத்தா அணியின் தலைவராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான் இருக்கிறார். இதனால் இந்த டுவிட்டை அவர் தான் போட்டிருக்க வேண்டும் என்று இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com