Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

ஆல்பத்தில் ஜி.வி

0

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘புருஸ் லீ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான்தான் கொப்பன் டா’ என்கிற சிங்கள் ட்ராக் பாடலுக்கு இசையமைத்தவர் கணேசன் சேகர். இவர் தற்போது,  ‘எனக்கெனவே’ என்கிற ரொமாண்டிக் ஆல்பத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தஅழகிய காதல் பாடல் ஆல்பத்தில் ராகேஷ் ராஜன் நாயகனாகவும், ஸ்முருத்தி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நடராஜிடம் துணை ஒளிப்பதிவாளராக இருந்த சுந்தர் ராகவன் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார். இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ளார். கவிஞர் முத்தமிழ் பாடலை எழுதியுள்ளார். மெட்ராஸ் டெக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெகதீசன், நவநீத பாபு, நரேன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படத்துக்கு முன்னோட்டமாக இருக்கும் இந்த இசை ஆல்பத்துக்கு பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குரல் கொடுத்துள்ளார்விரைவில் இப்பாடலின் ஃபர்ஸ்ட் லுக்  ப்ரோமோ வெளியாகவுள்ளது. இதைதொடர்ந்து முழு பாடலும் வெளியாகும். பாடலை உருவாக்கியுள்ள இதே குழு இணைந்து திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

 

Share.

Comments are closed.