இணையத்தில் வைரலாக வலம் வந்த குட்டி இளவரசர் ஆர்ச்சியின் படம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

0

சமீபத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகனின் மகன், குட்டி இளவரசர் ஆர்ச்சியின் படம் என்ற பெயரில் ட்விட்டரில் ஒரு படம் வெளியாகி வைரலாக வலம் வந்தது.

இளம்பச்சை நிற டவலில் போர்த்தப்பட்டிருந்த அந்த குழந்தையின் புகைப்படத்தைக் கண்ட மக்கள், அதை ஆஹா ஓஹோவென புகழ்ந்தனர்.

ஒருவர் அந்த குழந்தைக்கு அப்பாவைப்போலவே சிவப்பு நிற முடி இருப்பதாக வேறு குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த புகைப்படம் போலியானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த குழந்தை உண்மையில் ஜேர்மனியைச் சேர்ந்த, உடற்பயிற்சி கற்றுக்கொடுப்பவரான Bella Kraus என்பவரது குழந்தை.

அவரது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருந்த தனது குழந்தையின் படத்தை யாரோ திருடி தவறான செய்தி பரப்பியிருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அரண்மனை வட்டாரம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ புகைப்படங்கள், அரண்மனையின் சமூக ஊடக கணக்கில் மட்டுமே வெளியிடப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

அது மட்டுமின்றி, இளவரசர் ஹரிக்கும், மேகனுக்கும் இன்ஸ்டாகிராம் கணக்குதான் உள்ளதே தவிர, ட்விட்டரில் கணக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

<

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com