Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

இதில் 10க்கு மேற்பட்ட பகுதியில் அரிசிகளை பயிரிடும் பட்சத்தில் 20 கோடி மக்களுக்கு தேவையான 50 மில்லியன் டன் அரிசியை விளைவிக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தவிர, இதன் மூலம் சீனாவின் அரிசி உற்பத்தியை 20 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விளைந்த அரிசியின் 6 டன் அரிசியை இந்திய மதிப்பின் படி ஒரு கிலோ ரூ. 492.79க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

0
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” பகுதியாக உள்ளது.
தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி சுயாட்சி மாநிலமாக இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன.  
 
இந்த அடக்கு முறைக்கு எதிராகவும், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டியும் அங்கு போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதனால், பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் ஒன்றில் இந்தியா தரப்பில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்தியா தரப்பில் கூறப்பட்டதாவது:- “ ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் நீக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்பை  பாகிஸ்தான் கைவிட வேண்டும். 
 
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் துன்புறுத்துதல், மற்றும் சட்டவிரோத கொலைகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். இந்து, கிறிஸ்தவ, சீக்கிய மதத்தை சேர்ந்த இளம் பெண்களை கட்டாயமாக மதம்மாற்றி இளம்வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் நடைமுறையையும் முடிவுக்கு  கொண்டு வரவேண்டும். பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பகுதிகளையும் பாகிஸ்தான் அழிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Share.

Comments are closed.