இந்து பௌத்த சகோதரத்துவம் நாட்டுக்கு அவசியம்-ரத்ன தேரர்

0

அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இதனைத் கூறியுள்ளார்.

அத்துடன் அரசியல் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதில் கொண்டு பௌத்த, இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது என்றும், வடக்கு கிழக்கில் இரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே தாம் வவுனியாவிற்கு விஜயம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது இந்து, பௌத்த மக்கள் மத்தியிலும் சில பிரதேசங்களில் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் இந்து – பௌத்த மக்களின் ஒற்றுமை நாட்டுக்கு அவசியமானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com