இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை

0

உடலில் உள்ள சில முக்கிய பிரச்சனைகளை சில நிமிடங்கள் மசாஜ் செய்வதன் மூலம் குணமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.

காது

காதுகளின் மையப்புள்ளி பகுதியில் ஒரு நாளைக்கு இருமுறை, மூன்று நிமிடங்கள் விரலை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி செய்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றமானது வேகமாக நிகழ்வதோடு, உடல் சோர்வானது குறையும்.

முகம்

முகத்தின் மைய பகுதியில் தினமும் இரு முறை ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்தால் பசி மற்றும் பதற்றமான உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்.

கால்கள்

கால் முட்டி அருகில் உள்ள மைய புள்ளியில் தினமும் இரண்டு முறை வட்டமாக இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

இதனால் செரிமானம் அதிகரிக்கும், இதோடு உடல் அழற்சியும் குணமாகும்.

முழங்கை

முழங்கையில் தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முறை ஒரு நிமிடத்துக்கு மசாஜ் செய்யலாம்.

இப்படி செய்தால் வீக்கம் குறைவதோடு, குடல் பகுதியின் செயல்பாடு அதிகரிக்கும்.

கணுக்கால்

கணுக்காலில் தினம் ஒரு நிமிடத்துக்கு கை வைத்து அழுத்த வேண்டும். இப்படி செய்தால் கணுக்காலில் உள்ள வலி குறைந்துவிடும்.

மேலே கூறப்பட்டுள்ள சில நிமிட மசாஜ் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

 

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com