Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

இராணுவத்தினரால் பாதுகாக்கப்படும் புலிகளின் மாவீரர் நினைவு மண்டபம்

0
முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபம் ஒன்றை அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம்கள் உள்ளிட்ட போர்த்தடங்களை இராணுவ வெற்றிச் சின்னங்களாக படையினர் பாதுகாத்து வரும் நிலையில் குறித்த மாவீரர் நினைவு மண்டபத்தினையும் இராணுவத்தினர் பாதுகாத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த நினைவு மண்டபம் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முகாம்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதித்த இராணுவத்தினர் தற்போது அங்கு செல்லத் தடை விதித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் மற்றும் நீர்ப்பயிற்சி பாசறைகள் உள்ளிட்ட போர்த்தடங்களை பொதுமக்கள் பார்வையிட இராணுவத்தினர் தற்போதும் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share.

Comments are closed.