இறந்து 20 ஆண்டுகளுக்குப்பின் தோண்டி எடுக்கப்பட உள்ள பெண்ணின் உடல்: சுவாரஸ்ய பின்னணி

0

பிரித்தானியாவில் 20 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடல், கல்லறையிலிருந்து அவரது குடும்பத்தினராலேயே தோண்டியெடுக்கப்பட உள்ளது.

2000ஆவது ஆண்டு, கர்ப்பமாக இருக்கும் தனது மகள் ஜஸ்டினை காண்பதற்காக காரில் செல்லும்போது விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார் Gwendolen Crow (58).

அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் நேரத்தில், அவரது குடும்ப நண்பர் ஒருவரது ஏற்பாட்டின் பேரில் Gwendolenஇன் உடல் Surreyயிலுள்ள தேவாலய வளாகம் ஒன்றில் புதைக்கப்பட்டது.

Gwendolenஇன் இன்னொரு மகளான Rebecca, தனது தந்தையின் விருப்பத்தின் பேரில்தான் தனது தாயின் உடல் அந்த தேவாலய வளாகத்தில் புதைக்கப்பட்டதாக எண்ணிக்கொண்டார்.

பின்னர்தான், ஏன் Gwendolen அந்த தேவாலய வளாகத்தில் புதைக்கப்பட்டார் என்பது அவருக்கும் தெரியவில்லை என்பது தெரியவந்தது.

சரி, Gwendolen தேவாலய வளாகத்தில் புதைக்கப்பட்டதில் என்ன பிரச்சினை? Gwendolenம் அவரது குடும்பத்தினரும் கடவுள் என்றால் என்ன விலை என்று கேட்கும் நாத்திகர்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத Gwendolenஇன் மகள்களுக்கு தங்கள் தாயின் கல்லறையை சென்று தேவாலய வளாகத்திற்குள் பார்ப்பதற்கு எப்படியோ இருந்திருக்கிறது.

ஆனால் சபை சட்டங்களின்படி ஒருவரை தேவாலய வளாகத்தில் புதைத்து விட்டால் அவ்வளவுதான், அதற்கு பிறகு அதை ஒன்றும் செய்ய முடியாது.

இந்நிலையில் சபை சார் நீதிமன்றம் ஒன்றில் மேல் முறையீடு செய்தார்கள் Gwendolenஇன் குடும்பத்தார்.

குடும்பத்தாரின் பரிதாப நிலை கண்டு இரங்கிய நீதிபதிகள், வழக்கத்தை மீறி, Gwendolenஇன் உடலை தோண்டி எடுக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

தீர்ப்பின்படி Gwendolenஇன் உடல் விரைவில் தோண்டி எடுக்கப்பட்டு அவரது குடும்பத்தாரால் தகனம் செய்யப்பட உள்ளது.<

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com