இலங்கையிலிருந்து வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும்? வெளியானது புதிய தகவல்

0

உலகின் மிகவும் பலமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தினை பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டுகளின் கடவுச்சீட்டு தொடர்பில் ஆண்டுதோறும் ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு வருகிறது.

இந்த தரப்படுத்தலுக்கு அமைய உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டாக ஜப்பான திகழ்கிறது. ஜப்பான் நாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 189 நாடுகளுக்கு வீசா இன்றி பயணிக்க முடியும்.

இரண்டாவது இடத்தை சிங்கப்பூரும், தென் கொரியாவும் பெற்றுள்ளன.

மூன்றாவது இடத்தை பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் பெற்றுள்ளன.

நான்காவது இடத்தை டென்மார்க், சுவீடன், பின்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் வகிக்கிகன்றன.

புதிய பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இலங்கையின் கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி விசா இன்றி 43 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அண்டை நாடான இந்தியா 79, பங்களாதேஷ் 97, பாகிஸ்தான் 102, ஆப்கானிஸ்தான் 104 ஆவது இடத்திலும் உள்ளன.

<

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com