இலங்கை காலநிலையில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

0

இலங்கையின் பெரும்பாலன பகுதிகளில் நாளைய தினம் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ, ஊவா, மத்திய, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன், அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.மழை பெய்யும் வேளையில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதனை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com