இளவரசி மேகன் கர்ப்பகாலத்தில் செலவிடப்பட்ட பணம் எத்தனை கோடிகள் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

0

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் குழந்தை பெற்றுள்ள நிலையில் அவர் கர்ப்பமானது முதல் குழந்தை பெற்ற வரை ஆன மொத்த செலவுகள் குறித்து தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல் தம்பதிக்கு திங்கட்கிழமை அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேகன் கர்ப்பமானது முதல் குழந்தை பெற்றது வரை £800,000 செலவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

அதன்படி மேகனுக்கு நியூயார்க்கில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு £154,000 செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உணவுகளுக்கு மட்டுமே அதிகளவில் பணம் செலவழிப்பட்டது. பின்னர் ஹொட்டலில் தங்க £57,400 பணம் செலவிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல தனியார் விமான செலவாக £77,000 செலவிடப்பட்டது.

கர்ப்பிணியாக இருந்த மேகன் எடுத்து கொண்ட அக்குபஞ்சர் சிகிச்சைக்கு £8,700 பணமும், கண்களை நீரால் கழுவி குளிர்விக்கும் சிகிச்சைக்கு £6,200ம் செலவிடப்பட்டது.

மேகன் அணிந்த துணிகளுக்கு மட்டும் £385,000 பணம் செலவானது, மேகனுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட மருத்துவமனையில் ஒரு இரவுக்கு £15,000 செலவானது.

மற்ற இதர செலவுகள் என மொத்தம் £800,000 மேகனின் கர்ப்பகாலத்தில் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com