உங்கள் வயதில் 10ஐ குறைக்க இந்த ஒரு பழம் போதுமே!

0

செக்க சிவந்த நிறத்துடன் மட்டுமல்லாமல் அதிக சுவையும் உடைய செர்ரி பழத்தில் இளமைக்கான பயன்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

செர்ரி பழம்

பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருந்தாலும் செர்ரி பழத்தில் பலன்கள் ஏராளமாக உள்ளன. இதற்கு காரணம் இதில் அடங்கியுள்ள வைட்டமின் A, C, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தான்.

மேலும், செர்ரி பழத்தில் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் உள்ளன.

பலன்கள்

செர்ரி பழத்தின் மூலம் பருக்களை ஒழித்தல், சுருக்கங்களை சரிசெய்தல், இளமையான சருமம், வெண்மையான முகம் ஆகிய பலன்களை பெறலாம்.

பருக்களை நீக்குதல்

ஒரு தேக்கரண்டி தேன், 5 செர்ரி பழங்கள், முட்டை வெள்ளை கரு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

விதை நீக்கிய செர்ரி பழத்தை, தேன் மற்றும் முட்டையுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் பருக்கள் மறைந்து, முகம் வெண்மையாக மாறும்.

சுருக்கங்கள் சரி செய்தல்

முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய வைக்க, 5 செர்ரி மற்றும் 4 ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பழங்களை ஒன்றாக அரைத்து, முகத்தில் பூசி பின் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

இளமையான சருமம்

யோகர்ட் 2 தேக்கரண்டி, 5 செர்ரி பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். செர்ரி பழத்தின் விதையை நீக்கி விட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

அடுத்து யோகர்ட் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதனை செய்து வந்தால் உங்களுக்கு பத்து வயது குறைந்தது போன்று இருக்கும்.

வெண்மையான முகம்

ஒரு தேக்கரண்டி மஞ்சள், தேன், 6 செர்ரி பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். செர்ரி பழத்தை நன்றாக அரைத்து கொண்டு, பின் அதனுடன் தேன் சேர்க்க வேண்டும். பின்னர், சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகம் பொலிவான வெண்மை பெறும்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com