உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இப்படி ஒரு மாற்றமா? ஆப்கன் வீரர் ரஷித் கான் கண்டனம்

0

ஆப்கானிஸ்தான் அணியில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனியாக கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தனித்தனியான கேப்டன்களை நியமிப்பது என்று முடிவு செய்து, கேப்டன்கள் விவரத்தையும் வெளியிட்டது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கார்(31) கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக குல்படின் நைப், துணைக் கேப்டனாக ரஷித்கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுளனர்.

இதன்மூலம் உலகக் கோப்பையில் குல்படின் நைப் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கிறது. ஆனால், டெஸ்ட் அணிக்கு ஆல்-ரவுண்டர் ரமத் ஷாவும், டி20 அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதனை முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி ஆகியோர் விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், உலகக் கோப்பை போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்த கேப்டன்ஷிப் மாற்றம் சரியான முடிவு அல்ல, இது பொறுப்பற்ற செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

<a

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com