உலக வங்கியின் தலைவராகும் டிரம்பின் மகள்? வெளியான தகவல்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா, உலக வங்கியின் தலைவராக தெரிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவருக்கு பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன.

இந்நிலையில் திடீரென ஜிம் யோங் கிம் பதவி விலகுவதாக அறிவித்ததால், அவருக்கு பதிலாக உடனடியாக புதிய தலைவரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு ஐ.நாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹாலே மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோர் பரிசீலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இவாங்கா டிரம்புக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா நாடானது உலக வங்கியில் மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதால், அதன் தலைவர் பொறுப்புக்கு அமெரிக்கர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com