Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

எடையை குறைக்க முயற்சிக்கும் கர்ப்பிணிகளுக்கு சில ஆலோசனைகள்

0

பொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கிலோ கிராம் வரை அதிகரிக்க வேண்டும். குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கிலோ கிராம் வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்பகாலத்தில் 7முதல் 11 கிலோ கிராம் வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும்.

கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கிலோ கிராம் வரை உடல் அதிகரிக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 1 கிலோ கிராமை குறைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.

சிலர் கர்ப்பகாலத்தில் தமது உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கின்றனர். எனினும் அது நல்லதல்ல. அது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும், சத்துக்கள் மிக அவசியம்.

 

கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் இருக்கவேண்டிய உடல் எடையைவிட அதிக எடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறான நிலையிலும் பல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம்.

கர்ப்பகாலத்தில் நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உணவுகளில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்களது சாப்பாட்டில் குறைந்த அளவு உப்பு சேர்த்து கொள்வதே நல்லது. உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும்.

தமது உடல் ஆரோக்கியத்திலே தமது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் தங்கியுள்ளது என்பதை கர்ப்பிணிப் பெண்கள் கருத்தில் கொண்டு நடக்க வேண்டும்.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com