எத்தியோப்பிய விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இந்தியர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

0

தங்கள் நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக எத்தியோப்பியாவுக்கு புறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், ஞாயிறன்று நடந்த விமான விபத்தில் பலியாகியுள்ள செய்தி இந்தியாவை எட்டியுள்ளதையடுத்து அவர்களது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

கனடாவின் டொராண்டோவில் வசித்து வரும், குஜராத்தைச் சேர்ந்த இந்தியர்களான Pannagesh Vaidy (65) Hansini (60) தம்பதியர், எத்தியோப்பியாவில் பணிபுரியும் தங்கள் நண்பர் பிரகாஷை சந்திப்பதற்காக புறப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களது மகள் Kosha (37) கென்யாவில் பிறந்தவர் என்பதால், தான் பிறந்த இடத்தை பார்ப்பதற்காகவும் ஆப்பிரிக்க சஃபாரியை சுற்றிப் பார்ப்பதற்காகவும் டொரண்டோவில் பணிபுரியும் தனது கணவர் Prerit Dixit (43), மகள்கள் Ashka (15) Anushka (12) ஆகியோருடன் உடன் வருவதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

எனவே ஆறு பேருமாக எத்தியோப்பாவுக்கு புறப்பட்ட நேரத்தில்தான் அந்த கோர விபத்து ஆறு பேரையுமே பலி கொண்டு விட்டது.

தங்கள் மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்ற Preritஇன் தந்தையான Virendra Dixit (72) மற்றும் தாய் Parinda (69) ஆகியோர் இந்தியாவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் கனடாவுக்கு செல்லவும் அங்கேயே தங்கள் குடும்பத்தினரில் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள்.

Prerit மற்றும் Koshaவின் குடும்பத்தார் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்ததை அறிந்து தாங்கவொண்ணா சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ், Prerit மற்றும் Koshaவின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, தேவையான உதவிகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com