Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

எந்தவொரு போர் நீதிமன்றத்திலும் இராணுவ வீரர்களை நிறுத்த இடமளிக்கமாட்டேன்; ஜனாதிபதி

0

நாட்டின் தலைவராக நான் இருக்கும் வரையில் எந்தவொரு போர் நீதிமன்றத்திலும் இராணுவ வீரர்களை நிறுத்த இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,இராணுவ வீரர்களை நாம் தண்டிக்க முயற்சிப்பதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இருப்பினும் நான் நாட்டின் தலைவராக இருக்கும் வரையில் எந்தவொரு போர் நீதிமன்றத்திலும் இராணுவ வீரர்களை நிறுத்த மாட்டேன் என உறுதியளிக்கிறேன்.

அப்படியே தவறு செய்த இராணுவத்தினரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக இருந்தால், நாட்டின் சட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.உலகின் எந்தவொரு மனித உரிமை அமைப்பும், எந்த விதத்திலும் இலங்கை இராணுவத்தை கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com