என்ன ஆடுகளம் இது? டெல்லி மைதானம் குறித்து விளாசிய ரிக்கி பாண்டிங்

0

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் உள்ளூர் அணிக்கு உகந்த மாதிரி இல்லை என பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புகார் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 16வது லீக் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியை வீழ்த்தியது.

ஆனால் கோட்லா ஆடுகளம் வேகமின்றி காணப்பட்ட நிலையில், முதலில் ஆடிய டெல்லி அணி 129 ஓட்டங்களே எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

டெல்லி அணியின் தோல்விக்கு பிறகு அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆடுகள பராமரிப்பாளரை கடுமையாக விளாசியுள்ளார். அவர் கூறுகையில்,

‘இந்த ஆடுகளத்தன்மை எங்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்று கூறுவதே நியாயமாக இருக்கும். போட்டிக்கு முன்பாக ஆடுகள பராமரிப்பாளரிடம் பேசியபோது, முந்தைய ஆட்டங்களை காட்டிலும் இது மிகச்சிறந்த ஆடுகளமாக இருக்கும் என்று கூறினார்.

ஆனால் அதற்கு நேர்மாறாக மோசமான பிட்ச் ஆகிவிட்டது. பந்து குறைந்த அளவே பவுன்ஸ் ஆனதையும், ஆடுகளம் எவ்வளவு மந்தமாக இருந்தது என்பதையும் நீங்களே பார்த்து இருப்பீர்கள்.

இந்த ஆடுகளம் ஐதராபாத் அணியினருக்கே கன கச்சிதமாக பொருந்தியது. மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும், பந்தை வேகம் குறைத்து வீசக்கூடிய திறமையான வேகப்பந்து வீச்சாளர்களும் அவர்களிடம் உள்ளனர். இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு அருமையாக பந்துவீசினர். இத்தகைய ஆடுகளத்தில் பந்தை மெதுவாக வீசும்போது, அது ஏறக்குறைய அடிக்க முடியாத பந்துகளாகவே இருக்கும்.

அடுத்து வரும் ஆட்டங்களுக்கும் ஆடுகளத்தின் போக்கு தொடர்ந்து இது போன்றே இருக்குமே என்றால், ஆடும் லெவன் அணியில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்க வேண்டியது இருக்கும்.

மொத்தத்தில் இந்த ஆடுகளம் எங்களது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை. இது நாங்கள் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com