என் கணவர் குற்றம் செய்யவில்லை: பிசிசிஐக்கு உருக்கமான கடிதம் எழுதிய ஸ்ரீசாந்த் மனைவி!

0

வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள என்னுடைய கணவர் குற்றம் செய்யவில்லை என, தடையில் இருக்கும் ஸ்ரீசாந்தின் மனைவி இந்திய கிரிக்கெட் போர்டு சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது. இதனை நீக்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பிசிசிஐ தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது.

தன்னுடைய தடை நீக்கப்படாததால், கிரிக்கெட் வாழ்க்கை பாதிப்படைகிறது என கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஸ்ரீசாந்த் அதில் வெற்றி பெற்றார்.

ஆனால் பிசிசிஐ அதன் பிறகும் தொடர்ந்து தன்னுடைய நிலையிலிருந்து மாறவில்லை. இதனால் தற்போது உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.

இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், இந்தியில் சல்மான்கான் நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 12ல் கலந்து கொண்டிருக்கும் ஸ்ரீசாந்த், தன்னுடைய கிரிக்கெட் தடை குறித்து பேசி மனவேதனையை தெரிவித்தார்.

இதுபற்றி பலரும் இணையதளத்தில் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து வந்த அவருடைய மனைவி புவனேஷ்வரி ஸ்ரீஷாந்த் பிசிசிஐக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

அந்த பதிவில் தன்னுடைய கணவர் குற்றமற்றவர் என குறிப்பிட்டு அவர் எழுதியிருக்கிறார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com