ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: விசா பெற விரும்புவோருக்கு கனடா எச்சரிக்கை!

0

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடாவுக்கு செல்ல விசா பெறுவதற்காக பெரும் தொகையை செலவிடுகிறார்கள்.


இந்நிலையில், பணத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறும் பொது அறிவிப்புகளை கனடா அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், கனடா விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான தொகை வெறும் 100 கனேடிய டொலர்கள் மட்டுமே (இந்திய ரூபாயில் 5,200 ரூபாய்) என்றும் வெளிநாடுகளுக்கு மக்களை அனுப்பும் பல ஏஜன்சிகள் பெரும் தொகையை வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளது.


அத்துடன், அதிகாரப்பூர்வ கனடா அரசின் இணையதளம் வாயிலாக மட்டுமே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.


கனடா விசா பெற்றுத்தருவதாக கூறி ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக கனடா அரசுக்கு தகவல்கள் வந்துள்ளதையடுத்தே, கனடா அரசே முன்வந்து இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com