Breaking News
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் : உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் பற்றி விமர்சிக்க திமுகவுக்கு அருகதையில்லை:ஜெயக்குமார்
டி.டி.வி. தினகரனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி
எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு  
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மீண்டும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிக்கை பெற்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட அனுமதி கோர உள்ளதாக தகவல்

ஒப்பனையை நீக்க உதவும் இயற்கையான பொருட்கள்

0

மேக் அப் என்பது அழகிற்கு அழகு சேர்ப்பது. ஆனால் அதனை சரிவர நீக்காவிட்டால் அதனால் இருக்கும் அழகும் பாதிக்கப்படும். கடைகளில் விற்கப்படும் மேக்கப்பை கலைக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தினால் சருமப் பிரச்சினைகள் ஏற்படாது. அவ்வாறு பயன்படுத்தக் கூடிய சில பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பாதாம் பால்: பாதாம் கொட்டையிலிருந்து பாதாம் பால் தயார் செய்யப்படுகிறது. பாதாம் பாலில் லாக்டோஸ் இருப்பதில்லை. உரிக்கப்பட்ட பாதாம் கொட்டைகளை எடுத்து கிரீம் போல அரைத்துக் கொள்ளவும். நாள் முழுவதும் உடலில் தங்கியிருக்கும் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் மேக்கப்பை நீக்கவும் மற்றும் இயற்கையாகவே சுத்தம் செய்யும் கரைசலாகவும் பாதாம் பால் உள்ளது. இவ்வாறு மேக்கப்பை நீக்கும் போது சிறிதளவு பாதாம் பாலை எடுத்து ஒரு பருத்தி துணியை உருண்டையாக சுற்றி அதில் நனைத்து முகம் முழுவதும் வட்ட வடிவில் தேய்த்து சுத்தம் செய்யவும். இவ்வாறு தேய்த்து விட்டு முகத்தை நன்றாக கழுவவும். அதிகபட்சமாக இருக்கும் பாதாம் பாலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்துஇ ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயின் ஈரப்பதத்தை நிறுத்தி வைக்கும் குணம் உங்கள் முகம் வறண்டு போகாமலும் மற்றும் சோர்வடையாமலும் இருக்கச் செய்ய உதவும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் வெள்ளரிக்காய் உதவுவதால் செயற்கையான மேக்கப் நீக்கும் சாதனங்களை தேடிச் செல்வதை தவிர்க்கலாம்.

 

சோயா பால் மற்றும் வாழை: சோயா பால் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் கலவை மேக்கப் சாதனங்களை நீக்க மிகவும் இயற்கையான வழிமுறையாக உள்ளது. இந்த கலவையில் உள்ள என்சைம்கள் மேக்கப்பை கரைக்கவும் மற்றும் முகத்தில் தங்கியிருக்கும் அழுக்கை நீக்கவும் உதவுகின்றன. இந்த கலவையை உருவாக்கும் போது வாழைப்பழத்தை துண்டு துண்டாக வெட்டி, சோயா பாலுடன் கலந்து கொள்ளவும். இந்த இரண்டும் ஒன்றாக நன்றாக கலக்கும் வகையில் கலந்து விட்டு முகம் முழுவதும் தடவி விடுங்கள். இந்த கலவையை சில நிமிடங்கள் முகத்தில் தடவி விட்டு நன்றாக கழுவுங்கள்.

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய் உங்களுக்கு அகமும், புறமும் உதவக் கூடிய சுகாதாரமான எண்ணெயாகும். இயற்கையான பொருளாக இருக்கும் இந்த எண்ணெய் சிறந்த மேக்கப் நீக்கும் சாதனமாகவும் உள்ளது. ஆலிவ் எண்ணெயை தனியாக பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் மிகவும் நன்றாக கரையக் கூடிய கொழுப்புகளை கொண்டிருக்கும். வறண்ட தோலை ஈரப்பதமாக வைத்திருக்கும் குணமும் கொண்டுள்ளது. மிகவும் கடினமாக இருக்கும் மேக்கப்பை குறிப்பாக கண்களில் இருக்கும் மேக்கப்பை தேங்காய் எண்ணெய் நீக்கி விடுகிறது. மேலும் மேக்கப்பை தளர்த்தி விட்டு பூஞ்சைகள் மற்றும் வைரஸ்களை நீக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது

Share.

About Author

Comments are closed.