ஒரு நாள் பிரித்தானியா இளவரசி போல் வாழ்ந்த இளம்பெண்..! எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா?

0

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர், வாழ்கையில் மறைக்க முடியாத அளவிற்கு, மற்றவர்கள் இதை கேட்டே திகைத்துப் போகும் அளவிற்கு, அவர் படித்த பள்ளிக்கு பிரியாவிடை அளித்துள்ளார்.

16 வயதான இஷா சனா அக்தர் என்ற இளம்பெண்ணே இவ்வாறு அனைவரையும் திகைத்துப் போக வைத்துள்ளார்.

இஷா சனா அக்தர், ஜூலை 4, வியாழக்கிழமை, லாங்க்ஸ், பிளாக்பர்ன் நகரில், பள்ளி வாழ்க்கையின் இறுதி கொண்டாட்டத்திற்கு வந்தபோது பள்ளி நண்பர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள்.

இந்த நிகழ்விற்கு பள்ளி மாணவி ஒரு நீல நிற கவுன் அணிந்து வந்துள்ளார், அதன் மதிப்பு 260 பவுண்டு ஆகும். மேலும், அன்று ஒரு இரவுக்கு மட்டும் தனக்காக சொந்த கேமரா குழுவினரை 300 பவுண்டுக்கு வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

உச்சகட்டமாக, 15 நிமிடங்களுக்கு 500 பவுண்டு என, 4 மில்லியன் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதியப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடகைக்கு எடுத்து, அதில் கெத்தாக நிகழ்ச்சிக்கு வந்து இறங்கியுள்ளார் இஷா. மேலும், அவர் காரில் இருந்து இறங்கி நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு உள்ளே செல்ல, சொந்த செலவில் சிவப்பு கம்பலம் வரவேற்பையும் அமைத்துள்ளார்.

இவை அனைத்திற்குமான செலவை இஷாவின் அங்கிள் அமர் அக்பர் ஏற்றுள்ளார். இதுகுறித்து பேசிய இஷா, சிறு வயதில் இருந்தே அங்கிள் என்னை தந்தை போல் கவனித்து வருகிறார்.

நான் பள்ளியிலிருந்து பிரியா விடை பெறும் போது ஏதாவது சிறப்பாக, வித்தியசமாக செய்ய வேண்டும் என அவர் நினைத்தார். எனக்காக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடைகைக்கு எடுத்தது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அன்று இரவை எனக்கு மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது அங்கிள், ஆண்டி, புகைப்படகாரர்கள் உட்பட அனைவருக்கும் பெரிய நன்றி என இஷா தெரிவித்துள்ளார்.தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் இஷா, பிளாக்பர்னில் உள்ள செயின்ட் மேரி கல்லூரியில் மேற்படிப்பை படிக்க திட்டமிட்டுள்ளார். ரேடியோகிராஃபர் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையில் அறிவியல் பாடங்களைப் படிப்பேன் என்றும் இஷா கூறியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com