கப்பலிலிருந்து விழுந்த குழந்தை கொலையா? பொலிசார் விளக்கம்

0

தாத்தாவின் கையிலிருந்து தவறி விழுந்த குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இண்டியானாவைச் சேர்ந்த 18 மாதக் குழந்தை Chloe Wiegand, Puerto Ricoவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலிலிருந்து விழுந்து இறந்தாள்.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிசார், இன்னமும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், நடந்த சம்பவம் ஒரு விபத்து என்ற முடிவுக்கு வர முடியாது என்று கூறியுள்ளனர்.

தலைமை பொலிஸ் அதிகாரியான Sgt Jose D. Sanchez, நடந்த சம்பவம் ஒரு கொலையாகக் கூட இருக்கலாம் என்றார்.

அதனால் குற்றசாட்டு பதிவு செய்யப்படும்போது, அதில் கொலை, திட்டமிடாமல் நடந்த கொலை, அலட்சியம் காரணமாக நடந்த கொலை, என என்ன மாதிரியான குற்றச்சாட்டு வேண்டுமானாலும் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது, அதே நேரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமலே போகும் சூழலும் ஏற்படலாம் என்றார் அவர்.

குழந்தை Chloe, தனது தாத்தாவான Salvatore Anelloவின் கையிலிருந்து தவறி, கப்பலின் ஜன்னல் வழியாக 150 அடி உயரத்திலிருந்து விழுந்ததாக கருதப்படுகிறது.

Salvatore, ஜன்னல் மூடியிருப்பதாக நினைத்துக் கொண்டு குழந்தையை அதன் மீது சாய்த்து வைக்க முயன்றதாகவும், ஆனால் அது திறந்திருந்ததால் குழந்தை அதன் வழியாக கீழே விழுந்து விட்டதாகவும் குழந்தையின் குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் கப்பல் நிறுவனமான Royal Caribbean, அந்த இடத்தில் ஜன்னலில் கண்ணாடி இல்லை என்பதை தெளிவு படுத்தவில்லை என்று கூறி, கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக, கப்பல் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள் குழந்தையின் குடும்பத்தினர்.

<a

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com