கர்ப்ப காலத்தில் இவற்றை எல்லாம் சாப்பிடாதீங்க.. குழந்தை உயிருக்கே ஆபத்தாம்

0

கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் கவனமாக இருப்பது அவசியமானதாகும். உண்ணும் உணவுகள், செய்யும் வேலைகளிலில் கூட மிகவும் கவனமாக இருப்பதோ சிறந்ததாகும்.

குறிப்பாக உணவுகளில் அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் எந்த உணவு உண்டாலும் அது குழந்தையை சென்றடையும்.

அதுமட்டுமின்றி நாம் உண்ணும் சில உணவுகளால் கர்ப்பப்பை சுருங்குவதால் கருச்சிதைவு, குறைபிரசவம் அல்லது கருவிலிருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஆகியவை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிட கூடாத உணவுகளை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • கர்ப்ப காலத்தில் கற்றாழையை எடுத்துக்கொள்வது கருச்சிதைவுக்கு அல்லது குழந்தைக்கு பிறவி குறைபாடு உண்டாவதற்கு வழி செய்யும். இது தவிர பொட்டாசியம் குறைபாடு, இருதய கோளாறு, தசை பலவீனம் ஆகியவற்றையும் நாளடைவில் கொண்டு வரும்.
  • பூண்டு சேர்த்துக்கொள்வதும் கருப்பையை சுருங்கச் செய்யும். இது குறைபிரசவத்திற்கு காரணமாகும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.
  • ஆல்டர் பக்தார்ன் கர்ப்பிணிகளுக்கு வலியையும் குமட்டலையும் உருவாக்கக்கூடிய அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும்.
  • பார்பெர்ரி கருப்பையை அதிகமாக சுருங்க வைக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்தை உருவாக்கும். இது வாந்தி, வலிப்பு, வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா மற்றும் கருச்சிதைவுக்கு இந்த மூலிகை காரணமாகும்.
  • நார்த்தங்காய் இருதய செயல்பாட்டில் கோளாறை உருவாக்கி, பக்கவாதத்தை கொண்டு வரும். அது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்படையச் செய்யும். இது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நரம்புகளை பாதிக்கும். குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியில் கோளாறுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு.
  • தாய்மைப்பேறு காலத்தில் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் நரம்பு மண்டலத்தை தாக்கி, மனநிலை கோளாறுகளை உருவாக்கும்.
  • கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் அதிகமாக காபி குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தை எடை குறைவாகவும் பிறக்கக்கூடும்.
  • கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்த்து விட வேண்டும். அதில் காபின் அளவு அதிகம் உள்ளதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமாம்.
Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com