Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை ஒரு நோயா?

0

கர்ப்ப காலத்தில் காணப்படும் நித்திரையின்மை பொதுவாக எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. இந்த தூக்க குறைபாடு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணமும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை வருவதற்கு குழந்தையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந்து விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின்மை வர காரணமாக இருக்கலாம்.

ஒரு சில தாய்மாருக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகுவலி வரும். அவ்வாறு உண்டாகும் முதுகுவலியானது அந்த தாய்க்கு இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர்ப்பை மீது ஒரு அழுத்தத்தை உருவாக்கும். அதன் காரணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக்கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அந்தத் தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டிப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் கர்ப்ப கால ஓமோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதால், ஒரு தாய் இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்திருப்பாள்.

ஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்பட்டால் அது அவளது குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கக்கூடும். இந்தப் பதற்றம் தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கும். இது ஒரு நோயோ, குறைபாடோ இல்லை. பொதுவாக அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் எதிர்நோக்கும் ஒரு நிலைமையாகும்.

Share.

Comments are closed.