கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி வெளியிட்ட பரபரப்பான வீடியோ

0

ஓசூரில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியால் இருவரின் உயிருக்கும் ஆபத்து எனக்கூறி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அடுத்த B.தாசரப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் பவித்ரா – ஆனந்தன் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியவரவே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனையடுத்து கடந்த மாதம் 31ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் சேர்ந்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், இருவரும் வெளியேறியதிலிருந்து ஆனந்தன் நண்பர்களை, பவித்ராவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் வைத்து தாக்கி வருவதாகவும், இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் தங்கள் இருவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நாகராஜ் என்பவரும், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியுமே காரணம் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com