காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம்பெண்.. அறை கதவை உடைத்த ஊழியர்கள் கண்ட காட்சி

0

இந்தியாவில் காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் ரோசி (22). இவர் தனது காதலருடன் நேற்று பஹர்கஞ் பகுதியில் உள்ள ஹொட்டலுக்கு வந்து அறை எடுத்து தங்கினார்.

அப்போது ரோசிக்கும் அவர் காதலனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து காதலன் அறையை விட்டு வெளியேறினார்.

இதன்பின்னர் ரோசி, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலன் சண்டை போட்டு செல்வதை பார்த்த ஹொட்டல் ஊழியர்கள் ரோசி அறைக்கு சென்று வெகுநேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதன்பின்னர் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரோசி சடலத்தை கைப்பற்றிவிட்டு, அவர் காதலனை கைது செய்துள்ளனர்.

ரோசி தற்கொலைக்கு முன்னர் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என கூறியுள்ள பொலிசார் அவர் காதலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com