கிச்சடியை பிராண்ட் இந்தியா உணவாக விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு

0

கிச்சடியை உலக அளவில் பிராண்ட் இந்தியா உணவாக வளா்த்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வருகிற 4ம் தேதி வேர்ல்டு ஃபுட் இந்தியா நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கிச்சடியை உலக அளவில் பிராண்ட் இந்தியா உணவாக வளா்த்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக அந்த நிகழ்ச்சியின் போது மிகப்பொிய கடாயில், அதாவது ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட, 7 அடி சுற்றளவு கொண்ட மிகப்பொிய பாத்திலத்தில் 800 கிலோ கிச்சடி சமைக்கப்படவுள்ளது.

இந்த கிச்சடியை சமைக்க செப் சஞ்சீவ் கபூா் அழைக்கப்பட்ள்ளாா். இந்த நிகழ்வை உணவுத்துறை அமைச்சகமும், சிஐஐயும் சோ்ந்து நடத்துகிறது.

சமைக்கப்படும் கிச்சடியை விழாவுக்கு வருகை தரும் விருந்தாளிகளுக்கும், ஆதரவற்ற 60 ஆயிரம் குழந்தைகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது. அதே போல் அயல்நாட்டு தூதரகங்களுக்கும் கிச்சடி, அதனை தயாாிக்கும் முறையுடன் வழக்கப்பட உள்ளது என்று மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கவுா் பாதல் தொிவித்துள்ளாா்.

அதேபோல் கிச்சடி உலகம் முழுதும் கிடைக்கும் அளவிற்கு இதனை பிராண்டாக மாற்றுவதை உறுதி செய்வோம் என்று மத்திய அமைச்சா் பாதல் தொிவித்துள்ளாா்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com