கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டு அவமானப்படுத்தபட்ட மகள்: தந்தையின் முடிவால் நடந்த அதிசயம்

0

ஜெய்ப்பூரில் கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்ட மகளுக்காக ரூ.22 லட்சம் செலவில் கிரிக்கெட் மைதானத்தையே தந்தை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சுரேந்திரா மத்திய அரசின் சர்வே துறையில் கிளார்க் பணியில் உள்ளார்.

இவருக்கு 22 வயதில் பிரியா புனியா என்ற மகள் உள்ளார். டெல்லியில் வளர்ந்த பிரியா ஆரம்பத்தில் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டினாலும், நாளடைவில் அதனை விடுத்து கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

இதனை பார்த்த சுரேந்திரா முறையான பயிற்சிக்காக மகளை அழைத்து கொண்டு ஒரு தனியார் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பயிற்சி அளிக்க முடியாது எனகூறி அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து மகளுக்கு தனியாக ஒரு மைதானம் வாங்க முடிவெடுத்த சுரேந்திரா, 2010ம் ஆண்டு தனது சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் சுமார் ரூ.22 லட்சம் செலவில் ஜெய்ப்பூரின் புறநகர் பகுதியில் ஒரு மைதானத்தை வாங்கியுள்ளார்.

அதில் தீவிரமாக பயிற்சி பெற்ற பிரியா, 2015-ல் நடந்த தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் 42 பந்துகளில் 95 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன் காரணமாக இந்திய ஏ அணிக்கு தேர்வான பிரியா நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 59 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து தற்போது ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய மகளிர் டி-20 போட்டிக்கான பட்டியலில் இடம்பிடித்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com