Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

குடைமிளகாய் புலாவ்

0

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – அரை கப்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – கால் கப்
ஏலக்காய் – 1
கராம்பு – 2
பட்டை – சிறிதளவு
கரம் மசாலா – 1ஃ4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
அரைப்பதற்கு…

பூண்டு – 3 பற்கள்
மிளகு – அரை டீஸ்பூன்
முந்திரி – 5

செய்முறை:

கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோன்று குடை மிளகாயையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், அரிசியை நன்றாக கழுவி நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் பூண்டு, மிளகு, முந்திரியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கராம்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். சாதத்தை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

பின்னர் சிறிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தாளித்து அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டவும். அடுத்து உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான குடைமிளகாய் புலாவ் ரெடி!!!

Share.

Comments are closed.