குட்டி இளவரசர் ஆர்ச்சியால் பல ஆயிரம் பவுண்டுகள் வென்ற பிரித்தானிய பெண்மணி: வெளியான சம்பவம்

0

பிரித்தானியாவின் குட்டி இளவரசரின் பெயர் தொடர்பில் தனியார் நிறுவனங்கள் மேற்கொண்ட போட்டியில் பெண் ஒருவர் 18,000 பவுண்டுகள் வென்றுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என பெயர் சூட்டியுள்ளனர்.

குட்டி இளவரசரின் பெயர் தொடர்பில் பிரித்தானியாவில் செயல்படும் பந்தயம் கட்டும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் குட்டி இளவரசரின் பெயரை கணிக்க அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் ஆர்ச்சி என்ற பெயருக்கு 120 பவுண்டுகள் செலுத்தி பதிவு செய்துள்ளார்.

தற்போது குட்டி இளவரசருக்கும் அதே பெயரை தெரிவு செய்துள்ளதால், குறித்த பெண்மணிக்கு 18,120 பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.

தமது பேரக்குழந்தை ஒன்றும் இதே நாளில் பிறந்ததால் அதற்கும் ஆர்ச்சி என்றே பெயர் சூட்டியிருந்ததாகவும், தற்போது குட்டி இளவரசரும் அதே நாளில் பிறந்துள்ளதால் அவருக்கும் ஆர்ச்சி என்றே பெயர் சூட்ட வாய்ப்பு இருப்பதாக தாம் கணித்ததாகவும் அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது வென்றுள்ள இந்த பணத்தை தாம் தமது பேரப்பிள்ளைக்காக செலவிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com