Breaking News
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் : உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் பற்றி விமர்சிக்க திமுகவுக்கு அருகதையில்லை:ஜெயக்குமார்
டி.டி.வி. தினகரனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி
எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு  
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மீண்டும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிக்கை பெற்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட அனுமதி கோர உள்ளதாக தகவல்

குழந்தைகளின் முடி வளர்ச்சியில் பெற்றோரின் கவனம் இவ்வாறு இருக்க வேண்டும்

0

குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி அழகாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு தலைமமுடியை வளர்க்கவும் ஆரோக்கியத்தை பேணுவதற்கு; என்ன செய்யலாம் என எடுத்து நோக்குவோம்.

பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, வாரும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும்.

ஆறு மாதம் முதல் நேர் மற்றும் பக்கவாட்டில் வகிடு எடுத்து வார ஆரம்பிக்கலாம். வாரும்போது மேலிருந்து கீழாக வர வேண்டும். இதனால் முடி அடர்த்தியாக வளரும்.

பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும்போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடுவதால் நீளமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் அவசியம். ஒரு நாள் தேங்காய் எண்ணெய் தடவினால் பயத்தமாவு தேய்த்துக் குளிப்பட்டலாம். அடுத்த முறை நல்லெண்ணெய் தேய்க்கும்போது, கடலை மா கொண்டு குளிப்பாட்டலாம். பயத்த மா எண்ணெய்ப் பசையை எடுக்காமல், பார்த்துக்கொள்ளும். கடலை மா சுத்தமாக்கும். தலையில் இருக்கும் அடைப்புகளை நீக்கி முடி வளர்ச்சியைத் தூண்டும்.

குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து உச்சந்தலையில் ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கிக் கட்டுவது, மேல் நோக்கித் தூக்கி வாருவது கூடாது. இதனால் முன் நெற்றி மேடு பெரிதாகி, முடி வளர்ச்சியைப் பாதிக்கும்.

மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்று நினைக்கிறார்கள். ஆனால், மொட்டை அடித்ததும் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், முடி வளர்வது குறைந்துவிடும். மொட்டை அடித்ததும், நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். இல்லை எனில், குளிர்ச்சிக்காக சந்தனத்தைப் பூசுவதும் தவறு. இதனால், தலையில் செதில்கள் வந்து முடி வளர்வது தடைபடும்.

Share.

About Author

Comments are closed.