Breaking News
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் : உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் பற்றி விமர்சிக்க திமுகவுக்கு அருகதையில்லை:ஜெயக்குமார்
டி.டி.வி. தினகரனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி
எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு  
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மீண்டும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிக்கை பெற்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட அனுமதி கோர உள்ளதாக தகவல்

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை

0

குழந்தைகளுக்கு ஆறாவது ஏழாவது மாதத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்தே நாம் குழந்தைகளின் பற்களை பராமரிக்க தொடங்கி விட வேண்டும்.

• குழந்தை தினமும் காலை எழுந்ததும், மெல்லிய மஸ்லின் அல்லது மல்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும். இரவு, படுக்கைக்குச் செல்ல முன்னர் இவ்வாறு செய்தல் நல்லது. ஒரு வயது வரும் வரை இதை தொடருங்கள். பின்பு பிரஷ் கொண்டு பற்களை துலக்கலாம்.

• பால் பற்கள் முளைக்கும் போது, ஈறுகள் நம நமவென்று இருக்கும், இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது வழமை தான். அதனால் குழப்பமின்றி மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

• கரட், ஆப்பிழ்களை சிறிய துண்டுகளாக்கி கொடுப்பதால், பற்கள் வலுவுறும்.

• 1 வயதாகும் போது, பிரஷ் கொண்டு பல் துலக்குங்கள். காலையிலும், இரவிலும் பல் துலக்குங்கள். இதனால் குழந்தை இதனை தனது அன்றாட செயலாக கருதுவர். நீங்கள் மறந்தாலும், அவர்கள் உங்களுக்கு நினைவூட்டுவர்.

• அதிகளவு இனிப்பு பதார்த்தங்களை தவிருங்கள்.பெரும்பாலும், சொக்லட்கள் தவிர்ப்பது நல்லது.

• வருடம் ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.

Share.

About Author

Comments are closed.