குழந்தை வளர்ப்பில் ஒரு சில டிப்ஸ்

0

குழந்தைக்கு அசைவ உணவு எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும்

முட்டையுடன் தொடங்கவும் இது சிறந்த புரத ஆதாரமாகும் மற்றும் உங்கள் குழந்தையின் செரிமான அமைப்பிற்கு ஏற்றதாகவும் இருக்கும்.

ஆனால் 9 மாதத்திற்கு முன்பாக முட்டை கொடுக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ளவும். ஏனெனில் உங்கள் குழந்தையின் அமைப்புகள் முதிர்ச்சி அடைந்து அசைவ உணவுகளை செரிப்பதற்கு அவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்.

ஒரு வருடத்திற்கு பின் மீன் மற்றும் கோழி கொடுக்கவும் நீங்கள் உங்கள் குழந்தைக்கு மீன் அல்லது கோழி கொடுக்க விரும்பினால், ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும். 13 அல்லது 14 மாதங்களில் தான் ஆரம்பிக்க வேண்டும்.

நீங்கள் அசைவ உணவுகளை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போது, சூப் அல்லது குழம்பாக மட்டுமே கொடுக்க வேண்டுமே தவிர துண்டுகளைக் கொடுத்து விடக் கூடாது.

 

வாழைப்பழம் – ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

 ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம். அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம்.

தாய்மார்கள் குழந்தைகளின் தொப்புள் கொடியை சுத்தம் செய்யும் முன்னர், தங்களை கைகள் நன்கு சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.

இது தொப்புள் கொடியை சுத்தம் செய்யும் போது மட்டுமின்றி, குழந்தையை தூக்கும் போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

குழந்தைக்கு பயன்படுத்தும் துணி காட்டனாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் காட்டன் துணி கொண்டு குழந்தையின் தொப்புள் கொடியை மறைத்தவாறு வைத்துக் கொள்ளுங்கள்.

இதனால் காற்றின் மூலம் நோய்த்தொற்றுகள் தாக்குவதைத் தடுக்கலாம். மேலும் அவ்விடத்தில் ஈரப்பசை இருந்தால், அதனை காட்டன் துணிகள் உறிஞ்சிவிடும்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com