கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? இந்த காய்கறிகள் மட்டுமே போதும் –

0

இன்று பெரும்பாலானோர் முடி உதிர்வினால் பெரும் அவஸ்தைப்பட்டு வருகின்றது.

இதற்காக பணத்தை செலவழித்து விளம்பரங்களில் காட்டப்படும் எண்ணெய்கள்,மருந்துகள் வைப்பதனால் எந்த பயனுமே இல்லை.

கூந்தலுக்கான ஊட்டச்சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும் எனப்படுகின்றது.

அந்தவகையில் முடி உதிர்வைக் குறைத்து கூந்தல் வளர்சியை ஊக்குவிப்பது என்பதை பாரப்போம்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். வெங்காய வாசனையை போக்க சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளலாம்.

இந்தக் கலவையை தலை முடியில் தடவி 40 முதல் 50 நிமிடம் வரை வைத்திருந்து கழுவவும்.

உருளைக் கிழங்கு

இரண்டு மூன்று உருளைக் கிழங்கினை துருவி சாறு எடுக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊறவைத்துப் பின் முடியை அலசவும்.

பூண்டு

முடி வளர்ச்சிக்கு பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

கொத்தமல்லி

புதிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேர ஊறவைத்துப் பின் முடியை அலசவும்.

கேரட்

கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்கு பின் முடியை அலசவும்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com