கொழும்பில் இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்

0

இலங்கையின் தலைநகர் இன்று மாறுபட்ட காலநிலைக்கு முகங்கொடுத்துள்ளது.இன்று காலை கொழும்பு நகரம் முழுவதும் மூடு பனியால் மறைந்து காணப்பட்டதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூடு பனி ஏற்படுவதற்கு ஏதுவான காலநிலை இன்று அதிகாலை காணப்பட்டதாக திணைக்கள அதிகாரி கசுன் பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.

சூழலின் வெப்ப நிலையில் ஏற்பட்ட சமநிலை காரணமாக மூடு பனி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்று அதிகாலை முகில்கள் குறைந்த அளவு காணப்பட்டடுள்ளது. இதனால் சூழலின் வெப்ப நிலை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் மழையுடனான காலநிலை காரணமாக வளிமண்டலத்தின் நீராவி மட்டம் அதிகரித்தமையினால் ஈரப்பதம் அதிகமாக இருந்தது.

இந்த நிலைமையே கொழும்பு நகரம் இன்று அதிகாலை மூடுபனியினால் மூடுவதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com