கோத்தபாய ஆரோக்கியமாக இருக்கின்றார்: வீரவங்ச

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போது சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றுள்ளதுடன் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராகிய பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற கோத்தபாய ராஜபக்ச, வெற்றிகரமாக சிகிச்சையை செய்துகொண்டுள்ளார்.

இன்னும் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு, அவர்கள் நாட்டின் நேரடியான அரசியலில் ஈடுபடும் நோக்கில் நாடு திரும்ப உள்ளதாகவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com