கோவில் பெண் சிலைகளுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த இளைஞன்! சொன்ன காரணம்

0

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் கோவிலில் இருந்த பெண் சிலைகளுக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞன் ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அப்படி செய்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற இளைஞன் திருச்சியில் உணவுகளை விநியோகிக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ரம்ஜான் தினத்தை கொண்டாடுவதற்காக கடந்த புதன் கிழமை தஞ்சாவூரில் இருக்கும் 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உள்ளது. இதை பிரகதீஸ்வரர் கோவில்“ என வடமொழியிலும், பெருவுடையார் ஆலயம் என தமிழிலும் கூறுவர்.

பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் ! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை ! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான் ! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! pic.twitter.com/MERdD30Pu5— Kasturi Shankar (@KasthuriShankar) June 11, 2019

இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சென்ற முஜிபுர் ரஹ்மான் அங்கிருந்த பெண் கோவில் சிலைகளுக்கு முத்தம் இடுவது போன்ற புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com