கோஹ்லி படைக்கு எச்சரிக்கை விடுக்கும் இயான் சேப்பல்

0

இந்திய அணி துடுப்பாட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்துவிட்டு, அவுஸ்திரேலியாவிற்கு வர வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் இயான் சேப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில், அடுத்ததாக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர், நவம்பர் 21ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு இந்த சுற்றுப்பயணம் எளிதாக இருக்காது என்றும், இந்திய அணி வீரர்கள் தங்களது துடுப்பாட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொண்டு வர வேண்டும் என்றும் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறுகையில், ‘இந்திய அணி துடுப்பாட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

துடுப்பாட்டத்தில் வலுவாக இருந்தால் மட்டுமே இந்திய அணி அவுஸ்திரேலிய பயணத்துக்கு துணிச்சலுடன் வர முடியும். ஏனென்றால், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எதிரணியை மிரளச் செய்யும் அளவுக்கு வலுவாக இருக்கிறது.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இழந்து மதிப்பை இழந்துள்ளது. இதை மீட்டெடுக்க அவுஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு விளையாட நினைத்திருக்கிறது.

ஆனால், அவுஸ்திரேலிய பயணம் எளிதானதாக இருக்காது. அவுஸ்திரேலிய அணியின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இந்திய அணி அவுஸ்திரேலிய தொடரை எதிர்கொண்டால், எங்கள் அணி கொடுக்கும் தண்டனையை இந்தியா ஏற்க வேண்டியது இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com