சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மடக்கி பிடிப்பு

0

கிளிநொச்சி ஊரியான் கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோதமணல்அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களாலும் பொதுமக்களாலும் பொலிசாருக்கு பலதடவை தகவல்களை வழங்கியபோது பொலிசார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யாத நிலையே தொடர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றய தினம், பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன்; ஊரியான் கிராம அலுவலர் நந்தகுமார், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு நேரடியாகச்சென்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு உழவு இயந்திரத்தினையும், அதன் சாரதியினையும் கைது செய்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, இப்பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு உழவு இயந்திரங்கள் தப்பிச்சென்றுள்ளன.

இதேவேளை டிப்பர் வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் அகழ்வு செய்ய்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட கியுப் மணலையும் விசேட அதிரடிப்படையிரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com