சத்யா திரைப்படவிமர்சனம்

0
சிபிராஜும், ரம்யா நம்பீசனும் காதலித்து வருகின்றனர். ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது.  இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் சிபிராஜ், அங்கு இருக்க பிடிக்காமல் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார்.
 
சிபிராஜ் உடன் யோகி பாபுவும் பணியாற்றி வெளிநாட்டிற்கு செல்கின்றார். சில வருடங்களுக்கு பிறகு சிபிராஜுக்கு போன் செய்யும் ரம்யா நம்பீசன், தனது குழந்தை காணாமல் போய்விட்டதாகவும், சிபிராஜ் வந்து கண்டுபிடித்து தரும்படியும் கேட்கிறார்.  இதையடுத்து மீண்டும் சென்னை வரும் சிபிராஜ், ரம்யா நம்பீசனின் குழந்தை என்ன ஆனது என தேட ஆரம்பிக்கிறார். அப்போது அப்படி ஒரு குழந்தையே கிடையாது என ரம்யா நம்பீசனின் கணவர் கூறுகிறார். சமீபத்தில் நடந்த விபத்தில் ரம்யா நம்பீசன் கோமா நிலைக்கு சென்றதாகவும், கண்முழித்த பிறகு தனத குழந்தை எங்கே என்று கேட்பதாகவும் ரம்யாவின் கணவன் கூறுகிறார்.
 
கற்பனையில் குழந்தை இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். ஆனால் தனக்கு குழந்தை இருப்பது உண்மை என ரம்யா திட்டவட்டமாக கூறுகிறாள். கடைசியில், என்ன நடந்தது? சிபிராஜ் யார் சொன்னதை நம்பினார்? ரம்யா மீது நம்பிக்கை வைத்து குழந்தையை தேடினாரா? உண்மையிலேயே குழந்தை கிடைத்ததா? அல்லது ரம்யாவின் கற்பனை தானா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்தை.
சிபிராஜ் வழக்கம் போல தனது அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார். காதல், சண்டை, உண்மை எது என புரியாமல் நடித்திருக்கும் காட்சிகளில் இயல்பாகவே நடித்திருக்கிறார். சிபிராஜுக்கு நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு நல்ல ஏற்றத்தை கொடுக்கும் படமாக சத்யா படம் இருக்கும்.
 
ரம்யா நம்பீசனுடனான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.  ரம்யா நம்பீசன் கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார். சிபிராஜின் காதலியாகவும், குழந்தையை இழந்த ஒரு தாயாகவும் ரம்யா நம்பீசன் நடிப்பு ரசிக்க வைக்கிறது. வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், நிழல்கள் ரவி ஆகியார் பேசும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் ஷனம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த படத்தின் திரைக்கதை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சிமோன் கே.எஸ் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது. 
Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com