சம்பள உயர்வு கோரி மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

0

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஸ்டோனிகிளிப் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுப்படுவது எங்களுக்கு பயனில்லை என தெரிவித்த தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் தேயிலை தொழிற்சாலையிலிருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகின்ற தேயிலை தூளை தொழிற்சாலையிலிருந்து தடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் எனவே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிறுத்தி ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.
Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com