சிம்பாப்வேயை மீண்டும் வென்றது தென்னாபிரிக்கா

0

தென்னாபிரிக்கா, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், புளூம்பொன்டெய்னில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்கா, 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டேல் ஸ்டெய்ன் 60 (85), ஏய்டன் மர்க்ரம் 35 (49), அன்டிலி பெக்லுவாயோ 28 (44), கிறிஸ்டியன் ஜொங்கர் 25 (19), காயா ஸொன்டோ 21 (28) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டென்டாய் சட்டாரா 3, கைல் ஜார்விஸ், டொனால்ட் ட்ரிபானோ, பிரென்டன் மவுட்டா ஆகியோர் தலா 2, ஷோன் வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 199 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 24 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று 120 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஹமில்டன் மசகட்ஸா 27 (40) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், இம்ரான் தாஹீர் ஹட்-ட்ரிக் உள்ளடங்கலாக 6, டேல் ஸ்டெய்ன் 2, அன்டிலி பெக்லுவாயோ, லுங்கி என்கிடி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக டேல் ஸ்டெய்ன் தெரிவானார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com