Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

சுவையான முட்டைக் குழம்பு

0

தேவையான பொருள்கள்

முட்டை – 5
தக்காளிப் பழம் – 4
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள்– 3 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 2 தேக்கரண்டி
கறி மசாலா தூள் – 2 தேக்கரண்டி
சோம்புத் தூள் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முட்டைகளை வேகவைத்து கோது நீக்கி வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, புதினா இலையை காம்பு நீக்கி சிறிதாக அரிந்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். அதனுடன் மஞ்சள், மிளகாய், மல்லித்தூள், கறி மசாலா தூள் சேர்த்து கிளறவும்.

 

வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். தண்ணீர் சூடானதும் இரண்டு முட்டைகளை மெதுவாக உடைத்து ஊற்றவும். உடைத்து ஊற்றிய முட்டை கட்டியாகும் வரை மிதமான சூட்டில் சிறிது நேரம் சூடாக்கி அதன்பின்னர் வேகவைத்து எடுத்து வைத்துள்ள முட்டைகளையும் இரண்டாக வெட்டி சேர்க்கவும்.

தண்ணீர் வற்றியதும், சோம்பு, மிளகு தூள் சேர்த்து மல்லி, புதினா இலை தூவி இறக்கவும்.

சுவையான முட்டைக்குழப்பு தயார்!

Share.

Comments are closed.