ஜனாதிபதி வேட்பாளர் யார்? இறுதி முடிவை தொடர்பில் மகிந்த

0

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்டாயம் வெல்லக் கூடிய வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பெல்லன்வில ராஜமஹா விகாரையில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்யும் அவசியமில்லை எனவும் எனினும் அரசாங்கத்தை கவிழ்க்க தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com