ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் இடத்தில் இனி இவர்தான்?

0

ஜேர்மன் சேன்ஸலர் 2021இல் பதவி விலக இருக்கும் நிலையில், அடுத்து CDU கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏஞ்சலா மெர்க்கலின் அன்பைப் பெற்றவரான ஒருவர் ஏற்றுக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2021இல் தனது சேன்ஸலர் பதவியிலிருந்து விலகுவதோடு, Christian Democratic Union (CDU) கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பிறகு CDU கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு அவரது அன்பைப் பெற்றவரான AKK அல்லது மினி மெர்க்கல் என்று அழைக்கப்படும் Annegret Kramp-Karrenbauer (56) போட்டியிட இருக்கிறார்.

அதே இடத்திற்கு போட்டியிடும் இன்னும் இரண்டு வேட்பாளர்கள் ஏஞ்சலா மெர்க்கலின் புலம்பெயர்தல் கொள்கை குறித்து விமர்சித்துள்ள நிலையில் AKK தான் ஒரு நடுநிலையாளராக இருப்பார் என்பதை தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.

பெர்லினில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய Saarlandஇன் முன்னாள் பிரீமியரான AKK, புதிய தலைவர்கள், அவர்களுக்கு முந்தைய தலைவர்களின் அடிகளை பின்பற்றியே நடப்பார்கள் என்று கூறினார்.

ஒரு யுகம் முடிவுக்கு வரும் அதே நிலையில் புதிய அத்தியாயம் ஒன்று தொடங்க இருப்பதாக கூறிய AKK, எந்த கொள்கை மாற்றங்களையும் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.

திங்களன்று வெளியான கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று 60 சதவிகித CDU உறுப்பினர்கள் மெர்க்கலின் நடுநிலைமைக் கொள்கையையே ஆதரிப்பது தெரிய வந்துள்ளது.

செழிப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை தொடர்வதும், பொது மக்களின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் குடிமக்களை நிம்மதியாக வாழச் செய்வதுமே தனது தலையாய நோக்கம் என்று கூறியுள்ளார் AKK.

மற்ற போட்டி வேட்பாளர்கள் மீது எந்த சொற்போரும் நடத்தாத AKK, தான் வெற்றி பெற்றால், அவர்களையும் தனது அணியில் சேர்த்துக் கொள்ள இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com