டுபாயில் இருந்து அழைத்துவரப்பட்ட பயங்கரவாதிகளின் விபரம்!

0

ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் டுபாயில் இருந்து இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம்:

01) அயாத்து மொஹமட் அஹமட்மில்ஹான் என்பவரே முக்கிய நபராக தேடப்பட்டு வந்தார். இவருக்கு 30 வயது.

இவர் 45 இன் கீழ் 5 எஸ்.பி.வீதி புதிய காத்தான்குடி 2 .

02) 30 வயதான மொஹமட் மர்சூப் ரிலான் 522 யு தம்கம் வீதி அம்பாறை, மருதமுனை 3 .

03) மொஹமட் மொஹைதீன் மொஹமட் சன்வார்சப்தி 44 வயதுடையவர். சஹராஸ் கார்ட்ன் வெல்லம்பிட்டியைச் சேர்ந்தவராவார்.

04) 29 வயதான மொஹமட் ஸ்மைல், மொஹமட் இல்ஹாம் கம்புரடி வீதி காத்தான்குடி 01.

05) 37 வயதான அபுசாலி அபுபக்கர் இஜ்யாபுர எல்லவௌ கெப்பட்டிக்கொல்லாவை .

குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் ஜெத்தாவில் இருந்து அழைத்து வரப்பட்ட நிலையில் தற்பொழுது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 102 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாகவும், அவர்களில் 77 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும், 25 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவல்களை இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com